பேராசிரியர்களின் கோரிக்கைக்கு தீர்வு.. உறுதி அளித்தார் முதல்வர்..!

பேராசிரியர்களின் கோரிக்கைக்கு தீர்வு.. உறுதி அளித்தார் முதல்வர்..!

Update: 2022-03-02 04:45 GMT

புதுச்சேரி சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 16-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தினர்.

கடந்த வாரம், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து, அவர்களுடன் எம்எல்ஏ கே.எஸ்.பி.ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தி, முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். அப்போது, பதவி உயர்வு, வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உயர்வு ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ரங்கசாமி உத்தரவிட்டார். அதிகாரிகள், ஓரிருவாரத்தில் நிறைவேற்றுவதாக தெரிவித்தனர். கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றித்தரப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.

Similar News