கடன் சுமையில் சிக்காமல் இருக்க சில டிப்ஸ்!!

கடன் சுமையில் சிக்காமல் இருக்க சில டிப்ஸ்!!

Update: 2022-02-22 09:23 GMT

ஒரு நபரின் தேவைக்கும், வளர்ச்சிக்கும் கடன் முக்கியமாக இருக்கலாம். ஆனால் அதே கடன் சுமையாக மாறும்போது அவரது நிதிநிலையும், எதிர்கால திட்டங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

முன்பெல்லாம் கடன் பெற வங்கிக்கு செல்வோம். ஆனால் இப்போது கடன் வழங்குவதற்கு கிரெடிட் கார்டு, ஆன்லைன் தளங்கள், மொபைல் ஆப்கள் என பல வசதிகள் வந்துவிட்டன. அதனால் கடன் சுமையில் சிக்காமல் இருப்பது எப்படி என்று பார்க்கலாம்.

கடன் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முதல் விஷயமே உங்கள் நிதிநிலைதான். உங்களின் வருமானம் என்ன, கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய திறன் எவ்வளவும், EMI கட்டுப்படியாகுமா, ஏற்கெனவே இருக்கும் கடன்கள் எவ்வளவு என மொத்த நிதிநிலையை மதிப்பிட வேண்டியதே கடன் வாங்குவதற்கான முதல் வேலை.

கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான அபராதத் தொகை விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், உங்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே, கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதிக்கக்கூடாது.

newstm.in

Similar News