உக்ரைனில் சிக்கிய மகன்.. அதிர்ச்சியில் தாய் மரணம்.. வீடியோ காலில் பார்த்து கதறல்..!

உக்ரைனில் சிக்கிய மகன்.. அதிர்ச்சியில் தாய் மரணம்.. வீடியோ காலில் பார்த்து கதறல்..!

Update: 2022-02-28 14:54 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்; இவருடைய மனைவி சசிகலா. இந்த தம்பதியின் மகன் சக்திவேல். இவர், உக்ரைன் நாட்டின் முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.


சங்கர் - சசிகலா தம்பதியினர் கிராமத்தில் விவசாய வேலை செய்து வருகின்றனர். இதனிடையே, உக்ரைனில் நடைபெற்று வரும் போர் பகுதியில் சிக்கியுள்ள தனது மகனை நினைத்து சசிகலா பெரும் துயரில் ஆழ்ந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை சசிகலா எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சசிகலா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சக்திவேல் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், தாயின் இறுதிச் சடங்குகளை இளைய மகன் செய்ய வேண்டிய நிலையில் சக்திவேல் நாடு திரும்ப முடியாமல் வீடியோ காலில் தாயின் உடலைப் பார்த்து கதறி அழுதார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News