ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு!!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு!!

Update: 2022-07-16 20:15 GMT

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கு அம்மை பாதிப்பு பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பார்வையிட்டார்

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐரோப்பா, ஆப்ரிக்காஅமெரிக்கா உள்ளிட்ட உலகின் 63 நாடுகளில் குரங்கு அம்மை தாக்கம் கண்டறியப்பட்டது, ஆனால் கடந்த வாரம் 12 நாடுகளிலேயே இருந்தது என்றார்.

தமிழக கேரள எல்லையில் 13 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரள விமானங்களில் வருவோரும் கண்காணிக்கப்படுகின்றனர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் 2 விழுக்காடு நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், குரங்கம்மைக்கு சேர்த்து பரிசோதனை செய்யப்படுகிறது.

பாதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாட்டில் இருந்து வருவோரில் முகம் கையில் கொப்பளம் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. சென்னைக்கு ஜூலை மாதம் தினம்தோறும் 30-40 விமானம் மூலம் 5000-9 000 பயணியர் வருகை புரிகின்றனர்.

இந்த மாதத்தில் சென்னைக்கு 531 விமானம் மூலம்  1லட்சத்து 153 பயணியர் வருகை தந்துள்ளனர். அதில்  1987 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர் . 39 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது என்று கூறினார்.

குரங்கு அம்மைக்கு  சென்னையில் ஒரு ஆய்வகம்  அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சென்னையில் குரங்கு அம்மைக்கு  ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு தயாராகியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

newstm.in

Similar News