ரேஷன் அட்டையில் மாற்றம், திருத்த செய்ய இன்று சிறப்பு முகாம்.. சூப்பர் சான்ஸ் !!
ரேஷன் அட்டையில் மாற்றம், திருத்த செய்ய இன்று சிறப்பு முகாம்.. சூப்பர் சான்ஸ் !!
ரேஷன் கார்டில் மாற்றம், திருத்தம் செய்வது தொடர்பாக இன்று சிறப்பு முகாம் நடைபெறுவதால் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். இப்போது சிறிய புத்தகம் போன்று இருந்த குடும்ப அட்டை இப்போது ஸ்மார்ட் கார்டாக மாறிவிட்டது. அதை பெறுவதும் ஈஸி தான். ரேஷன் கார்டு இல்லாமல் மாதாந்திரம் உணவுப் பொருட்களை வாங்குவது இயலாத ஒன்று.
ஒரு குடும்பத்திற்கு ஒரு ரேஷன் கார்டு, அப்ளை செய்த பிறகு முறைப்படி அரசு அதிகாரிகள் வீட்டுக்கு வந்து தகவல்களை, இருப்பிடங்களை உறுதி செய்த பின்னர் ரேஷன் அட்டை வழங்குவார்கள். இதற்கு 3 - 5 மாதங்கள் வரை ஆகி வந்த நிலையில் தற்போது அனைத்து ஆன்லைன் மூலம் மாற்றப்பட்டுள்ளதால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் கிடைக்கும்படி வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது தொடர்பான ஏதாவது புகார் இருந்தாலும் தொலைபேசி அல்லது ஆன்லைன் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடும்ப அட்டைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்த ஆய்வு ஒன்று இன்று (சனிக்கிழமை) காலை சென்னையில் நடக்கிறது. ரேஷன் கார்டுகளில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்புவர்கள் நாளை நடைபெற உள்ள முகாமில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் உங்கள் ரேஷன் கார்டு குறித்த குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in