ஆபத்துடன் விளையாட்டு.. 365 உணவு டெலிவரி ஊழியர்கள் மீது வழக்கு, அபராதம் !
ஆபத்துடன் விளையாட்டு.. 365 உணவு டெலிவரி ஊழியர்கள் மீது வழக்கு, அபராதம் !
சென்னை பெருநகரில் தற்போது பெரும்பாலான வீடுகளில் சமைப்பது இல்லை என்பது தெரிகிறது. ஏனெனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர்கள் முன்பைவிட இப்போது பெரும் பிஷியாக உள்ளனர். இதனால் சாலைகளில் அவர்கள் விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதாவது சென்னையில் மொபைல் செயலி அடிப்படையில் ஏராளமான உணவு விநியோக நிறுவனங்களின் சேவைகள் செயல்பட்டு வருகின்றன. உணவு விநியோகிப்பவர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன் காரணமாக பெரும்பாலான உணவு விநியோக வாகன ஓட்டிகள் சிக்னல்களை மதிப்பதே இல்லை.
சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்டு, எதிர் திசையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்பெட் அணியாமல் செல்வது, கைப்பேசி பயன்படுத்திக் கொண்டே வாகனம் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகர காவல்துறையினர் களத்தில் இறங்கியுள்ளனர். சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், உணவு விநியோகம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கான சிறப்பு வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். கடந்த 15ஆம் தேதி அன்று மீண்டும் சிறப்பு வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் மொத்தம் 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 48 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களால் ஏற்படும் போக்குவரத்து விதி மீறல்களை குறைக்க GCTP எடுத்த முயற்சிகள் முன்புடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. எனினும் போக்குவரத்து விதிகளை மீறும் உணவு டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தணிக்கை மேலும் தொடரும், என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
newstm.in