பற்றி எரியும் இலங்கை.. பெட்ரோல் விற்பனை நிறுத்தம் !

பற்றி எரியும் இலங்கை.. பெட்ரோல் விற்பனை நிறுத்தம் !;

Update: 2022-05-12 08:30 GMT

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இலங்கையில் பற்றி எரிகிறது. மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். கடந்த திங்களன்று போராட்டக்காரர்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. ஆளுங்கட்சி எம்பிக்கள், அமைச்சர்கள் ஆகியோரின் வீடுகளை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.
அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. ஆளுங்கட்சி எம்பிக்கள் வீடுகளும் சூறையாடப்பட்டு வருகிறது.
ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ. ராஜபக்சேவின் நினைவிடத்தையும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அவரது சிலையை உடைத்தனர். பல்வேறு இடங்களிலும் தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு இலங்கையில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் பாதுகாப்பு நிலையை கருத்தில்கொண்டு பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (ceylon petroleum corporation) தெரிவித்துள்ளது.
Newstm.in
Tags:    

Similar News