ஒட்டுவதில் தான் ஸ்டாலின் ‘நம்பர் ஒன்’.. அண்ணாமலை அதிரடி..!

ஒட்டுவதில் தான் ஸ்டாலின் ‘நம்பர் ஒன்’.. அண்ணாமலை அதிரடி..!

Update: 2022-06-10 11:43 GMT

மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: “திமுக 517 தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.

ஆண்டுக்கு 110 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினால், ஐந்து ஆண்டில் நிறைவேற்றுவர். நாங்கள் தொடர்ந்து திமுக அரசை கேட்டு வருகிறோம்.

நீங்கள் எத்தனை தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி உள்ளீர்கள் என ஒரு வெள்ளை அறிக்கை கொடுங்கள் பார்க்கிறோம்.

எங்கள் கணக்குப்படி, திமுக அரசு, முழுமையாக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதி 15ஐ தாண்டாது. இதைக் கேட்டால், 'மத்திய அரசு நிதி வழங்காமல் ஓரவஞ்சனை செய்கிறது' என சொல்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நம்பர் ஒன்னாக உள்ளார்.

மத்திய அரசு நடத்தும் கூட்டங்களுக்கு, தமிழக அமைச்சர்கள் போகமாட்டார்கள். கூட்டம் முடிந்த பின், மத்திய அரசிடம் இருந்து வரும் குறிப்பை எப்படி மாநில அரசு திட்டமாக மாற்றலாம் என ஆலோசனை செய்வர்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் 13 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஒருவர் கூட பதில் கடிதம் எழுதவில்லை. தமிழகத்தில் உள்ள பாதி மருத்துவக் கல்லூரிகள் திமுக அமைச்சர்களின் மனைவி பெயரில் உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'பழைய சேகர்பாபுவை பார்க்காதீர்கள்' என கூறுகிறார். அதைப் பார்க்க தான் பாஜக உள்ளது.

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 'ஜி ஸ்கொயர்' தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார். அவர் அனுபவத்துக்கு இது அழகில்லை. அவரை, 'ஜி ஸ்கொயர்' முத்துசாமி என அழைக்கலாம்.

தமிழகத்தில் ஒவ்வொரு திட்டத்திலும் லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடுகிறது. அவற்றை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்பது தான் நமக்கு சவாலாக உள்ளது. மத்திய அரசின் திட்டத்தை லஞ்சம் லாவண்யம் இல்லாமல் பெற முயற்சி எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

Similar News