தொடங்கியது நடவடிக்கை… இனி மாஸ்க் கட்டாயம்!!

தொடங்கியது நடவடிக்கை… இனி மாஸ்க் கட்டாயம்!!

Update: 2022-04-19 06:45 GMT

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் அருகேயுள்ள 6 மாவட்டங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த 2 நாட்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதல் நாளுடன் ஒப்பிடும்போது பாதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் கடந்த 4 நாட்களாக பரவல் சீராக அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனா பரவலின் 4ஆவது அலை ஏற்பட்டு விட்டதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக பாதிப்பு இறங்கு முகமாக இருந்த நிலையில், தற்போது அதிகரிக்கிறது.

அதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து என்ன மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று டெல்லி அரசு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியை சுற்றியுள்ள உத்தரப்பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, கவுதம புத்த நகர், காஜியாபாத், ஹாபூர், மீரட், புலந்த்சாகர், பாக்பாத், லக்னோ ஆகிய மாவட்டங்களில் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

முன்னதாக கொரோனா பாதிப்புகள் குறைந்ததால் மாஸ்க் அணிதல் அவசியமில்லை என்பது உள்பட பல தளர்வுகளை உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது நோய் பரவல் அதிகரிப்பதால் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News