மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி.. பதக்கம் வென்ற பழங்குடியின மாணவர்கள்..!
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி.. பதக்கம் வென்ற பழங்குடியின மாணவர்கள்..!
மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன் பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பயிலும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று மாணவிகள் கடந்த 1-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றனர்.
இதில், சப் ஜூனியர் பிரிவில் போட்டியிட்ட மாணவர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும், 5 வெள்ளிப் பதக்கத்தையும் குவித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதை தொடர்ந்து, புதுக்கோட்டையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் பங்கேற்ற நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவி தனலட்சுமி 54 முதல் 56 கிலோ எடைப் பிரிவிலும், மாணவி வெண்ணிலா 36 முதல் 38 கிலோ எடைப் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களை வெல்வோம் என மாணவிகள் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனர்.