வரும் ஜூன் 10ம் தேதி மாநிலங்களவை தேர்தல்..!!

வரும் ஜூன் 10ம் தேதி மாநிலங்களவை தேர்தல்..!!

Update: 2022-05-13 11:58 GMT

வரும் ஜூன் மாதம் 29ம் தேதியுடன் தி.மு.க.வைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.ராஜேஷ்குமார், மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

சட்டப்பேரவையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் திமுகவுக்கு மாநிலங்களவையில் 4 உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. அதேபோன்று அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் உள்ளன.

திமுகவின் கூட்டணி கட்சியினருக்கும், அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான எண்ணிக்கையின் காலி இடங்களில் வாய்ப்பு கிடைக்குமா அல்லது பிரதான கட்சிகளே தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

திமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ராஜ்யசபையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே திமுகவுக்கு ஏற்கனவே உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் மேலும் ஒரு உறுப்பினர் கூடுதலாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர்களின் அடிப்படையில் வாக்குகள் நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை என்பதால் இந்த தேர்தல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24-ம் தேதி தொடங்கப்பட்டு 31-ம் தேதி நிறைவடைகிறது. ஜூன் 1-ம் தேதி வேட்பமனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 3-ம் தேதி கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த காலியிடங்களில் தமிழகத்திற்கு 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் அடங்குவர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News