மீண்டும் பரபரப்பு! மலையேற்றத்தின் போது 200 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!!

மீண்டும் பரபரப்பு! மலையேற்றத்தின் போது 200 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!!

Update: 2022-02-21 06:15 GMT

கர்நாடகாவில்  மலையேற்றத்தின்போது 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை, இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

சில வாரங்களுக்கு முன்பு தான் கேரளாவில், மலையேற்றத்தின்போது தவறி விழுந்த இளைஞர் ஒருவர் 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்பாறை இடுக்கில் சிக்கியிருந்த அவரை இந்திய  ராணுவம் போராடி மீட்டது

அந்த பரபரப்பே ஓயாத நிலையில்கர்நாடகவில் ஒரு இளைஞர் மலையேற்றத்தின் போது 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரம்மகிரி மலைத்தொடரில் இளைஞர்கள் ட்ரெக்கிங் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் 19 வயது இளைஞர் நண்பர்கள் சிலருடன் பிரம்மகிரி மலைக்கு ட்ரெக்கிங் சென்றார். அதிக பாறைகளைக் கொண்ட இந்த மலையில் சென்று கொண்டிருந்தபோடு, எதிர்பாராதவிதமாக அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்

செங்குத்தான மலையில் இருந்து கீழே விழுந்த அவர் சுமார் 200 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அவருடன் சென்றவர்கள் உடனடியாக கர்நாடக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்ஆனால் இளைஞரை மீட்க முடியாததால் இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த  இந்திய விமானப்படையினர்ஹெலிகாப்டர் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த  இளைஞரை பத்திரமாக மீட்டனர். இதுபோன்ற மலைகளில் ட்ரெக்கிங் செல்பவர்கள் மிகுந்த  கவனத்துடன் செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

newstm.in

Similar News