திமுகவினருக்கு வயிற்றெரிச்சல்.. சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்..!
திமுகவினருக்கு வயிற்றெரிச்சல்.. சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்..!
வரும் 21-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் செல்கிறார். அதை முன்னிட்டு, வேலூர் அரியூரில் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; “கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்றனர்.
அந்த கடன் சுமையுடன் ஆட்சி பீடத்தில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார். நிதி கஷ்டத்தை மக்களிடம் கூற முடியாது. நிதியை சமாளிக்க முதல்வருக்கு தெரியும்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பும் தீர்மானங்களில் கையெழுத்து போட மாட்டேன் என்கிறார் கவர்னர். கூட்டுறவுத் துறையின் பதவி காலம் மூன்றாண்டு என குறைத்து மூன்று முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினோம்.
இதுவரை கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு சட்டத்தில் அவர் கையொப்பம் இடவில்லை. அதனால், எதிர்க் கட்சியினரே அந்த பதவிகளில் உள்ளனர்; நம் கட்சிக்காரர்கள் வயிறு எரிகின்றனர். கவர்னர் கையொப்பம் இடவில்லை என்றாலும் கூடிய விரைவில் அதற்கு ஒரு நல்ல முடிவை நாங்கள் எட்டுவோம்” என்றார்.