நிறுத்தனும் ஐபிஎல் போட்டியை உடனே நிறுத்தனும்.. ட்ரெண்ட் செய்யும் சென்னை, மும்பை ரசிகர்கள் !!
நிறுத்தனும் ஐபிஎல் போட்டியை உடனே நிறுத்தனும்.. ட்ரெண்ட் செய்யும் சென்னை, மும்பை ரசிகர்கள் !!
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. புதியதாக வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட் ஆகிய அணிகள் நன்றாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் டாப் வரிசையில் உள்ளனர். வழக்கமாக சிறப்பாக விளையாடும் சென்னை மற்றும் மும்பை அணிகள் இந்த முறை பட்டியலின் கடைசியில் இருக்கின்றன.
இந்நிலையில் டெல்லி அணியை சேர்ந்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இன்று போட்டிக்காக புனோவிற்கு செல்வது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ட்விட்டரில் ஐபிஎல் போட்டியை நிறுத்த சொல்லி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமா ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் பாதி போட்டிகள் சில மாதங்கள் கழித்து துபாயில் நடத்தப்பட்ட நிலையில் தற்போதும் அதே போல ஐபிஎல் போட்டியை நிறுத்த சொல்லி ட்வீட்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் ஐபிஎல் தொடரை நிறுத்தக்கோரி ட்ரெண்ட் செய்துவருவது சென்னை மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் தான்.
அதாவது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் போட்டியை நிறுத்த வேண்டும் என வித விதமாக ட்வீட் செய்து வருகின்றனர். எப்படியும் இந்தாண்ட கோப்பை கிடையாது என்பதால் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர் இரு அணிகளின் ரசிகர்கள். ஆனால் மற்ற அணிகளின் ரசிகர்கள் அவர்களை கலாய்த்து வருகின்றனர். இதனால் ட்விட்டரே அதகளமாகியுள்ளது.
Csk And Mi fans:-
— Dk`shock! (@poppingCrease1) April 18, 2022
"True friendship" ❤
Cancel IPL#IPL2022 pic.twitter.com/vXC54rWzHa
Okay let's cancel ipl 😃🤪#TATAIPL #DelhiCapitals pic.twitter.com/5LSXDypZ54
— Dhina (@dinak731) April 18, 2022
newstm.in