“மக்களை முட்டாளாக்கும் போக்கை நிறுத்துங்கள்” : ராகுல் காந்தி காட்டம்!!
“மக்களை முட்டாளாக்கும் போக்கை நிறுத்துங்கள்” : ராகுல் காந்தி காட்டம்!!
பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுதை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைந்துள்ளது.
இதையடுத்து ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதிகமாக விலையை உயர்த்திவிட்டு ரூ. 9 மட்டும் விலையை குறைத்தால், மக்கள் நம்பமாட்டார்கள் என விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், மக்களை முட்டாளாக்கும் போக்கை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "2020ஆம் ஆண்டு மே 21இல் ரூ.69.05 ஆக இருந்த பெட்ரோல் நடப்பு ஆண்டில் இதே தேதியில் ரூ.105.4 ஆக உயர்ந்தது. 2020 மார்ச் 1ம் தேதி ரூ.95.04 ஆக விற்பனையான பெட்ரோல், 2022 மே 21ம் தேதி ரூ.105.4 ஆகவும், தற்போது மே 22ல் ரூ.96.07க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Petrol Prices
— Rahul Gandhi (@RahulGandhi) May 22, 2022
May 1, 2020: ₹69.5
Mar 1, 2022: ₹95.4
May 1, 2022: ₹105.4
May 22, 2022: ₹96.7
Now, expect Petrol to see ‘Vikas’ in daily doses of ₹0.8 and ₹0.3 again.
Govt must stop fooling citizens. People deserve genuine relief from record inflation.
பெட்ரோல் விலை மீண்டும் நாள்தோறும் ரூ.0.8 மற்றும் ரூ.0.3 என்ற அளவில் உயரலாம். பணவீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணம் பெறுவதற்கு மக்கள் தகுதியானார்கள். மக்களை முட்டாளாக்கும் போக்கை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
newstm.in