கண்காணிப்பை நிறுத்தனுமா? - டெஸ்லா காருக்காக எலான் மஸ்கிடம் 50 ஆயிரம் டாலர் கேட்ட மாணவர் !

கண்காணிப்பை நிறுத்தனுமா? - டெஸ்லா காருக்காக எலான் மஸ்கிடம் 50 ஆயிரம் டாலர் கேட்ட மாணவர் !

Update: 2022-02-03 18:25 GMT

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது விந்தையான கண்டுபிடிப்புகளால் உலக மக்களை வியப்படையச் செய்து வருகிறார்.எலெக்ட்ரிக் சொகுசு கார், தனியாக விண்வெளி செயற்கைகோள் என கலக்கி வரும் எலான் மஸ்க் தான் பயணம் செய்ய சொந்தமாக தனி விமானம் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஒரு ட்விட்டர் கணக்கால் 19 வயது இளைஞனிடம் பேரம் பேசும் நிலைமை ஏற்பட்டுள்ளது எலான் மஸ்க்-க்கு. உலகம் முழுவதும் தற்போது பேசுபொருளாகியுள்ளது இந்த விவகாரம்.

அப்படியென்ன நிலைமை ஏற்பட்டது? ஏன் 19 வயது இளைஞனும் எலான் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்பது தான் இதற்கான காரணம். ஜாக் ஸ்வீனி உருவாக்கிய ட்விட்டர் பாட், எலான் செல்லும் தனி ஜெட் விமானத்தைக் கண்காணித்து பயணம் குறித்த தகவல்களை ட்விட்டரில் பதிவிடுகிறது. எலான் மஸ்கிற்கு மட்டுமில்லை, ஜாக் ஸ்வீனி 15 ட்விட்டர் பாட் கணக்குகளை வைத்துள்ளார். அமேசான் ஜேப் பெசோஸ் தொடங்கி பில்கேட்ஸ் வரை அவர் பின்தொடர்ந்த எந்த ஜெட் விமானம் எங்கு பறந்தாலும் ட்விட்டர் பாட் பதிவு செய்துவிடும்.


கடந்த வருட இறுதியில் ஒரு நாள் 12:13 மணிக்கு, இது பாதுகாப்புக்கு ஆபத்தானது. இந்த கணக்கை செயலிழக்க செய்ய முடியுமா, என எலானிடம் இருந்து 19 வயது இளைஞன் ஜாக் ஸ்வீனி-க்கு கோரிக்கை வந்துள்ளது. இதற்கு நம்மூர் வடிவேல் பாணியில் பதில் அளித்துள்ளார்.

அதாவது, முடியும் ஆனால் கொஞ்சம் செலவாகுமே என மெசேஜ் தட்டி விட்டிருக்கிறார், ஜாக் ஸ்வீனி. ஜாக் அளித்த பதில், 50 ஆயிரம் டாலர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?. இந்த தொகை கல்லூரியில் படிப்பதற்கு பெரிய ஆதரவாக இருக்கும், டெஸ்லா மாடல் 3 போல எனக்கு ஒரு கார் வாங்க உதவியாக இருக்கும், என பதில் அனுப்பியிருக்கிறார்.  

அடபாவி, உணக்கு இப்படியோரு ஆசையா என மனதுக்குள் எண்ணிய எலானிடம் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. உரையாடலின் நடுவில் எலான், மரை கழண்டவர்களால் நான் சுடப்பட்டு இறப்பதை விரும்பவில்லை, எலன் மஸ்க் எனத் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் டுவிட்டர் மெசேஜ்கள் வாயிலாகவே நடைபெற்றுள்ளன. கடைசியாக இருவரும் ஜனவரி 26 ஆம் தேதி உரையாடி இருக்கின்றனர்.

இதனிடையே, பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், 5 ஆயிரம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3,73,532 கொடுப்பதாக எலான் மஸ்க்  தெரிவித்தார். எனினும், ஸ்வீனி தனக்கு 50 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37,33,710 வேண்டும் என எலான் மஸ்கிடம் தெரிவித்து இருக்கிறார். 

ஜாக் ஸ்வீனி பயன்படுத்தி வரும் @ElonJet டுவிட்டர் அக்கவுண்டை 2,07,200 பேர் பின்பற்றி வருகின்றனர். இந்த அக்கவுண்ட் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் எலான் மஸ்க் தனி விமானத்தை டிராக் செய்வதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்காக ADS-B டேட்டா மற்றும் பாட் ஒன்றை பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

Similar News