இந்தோனேசியாவில் வினோத நடைமுறை..திருமணம் முடிந்த பின் 3 நாள் பாத்ரூம் போக கூடாதாம்..!!

இந்தோனேசியாவில் வினோத நடைமுறை..திருமணம் முடிந்த பின் 3 நாள் பாத்ரூம் போக கூடாதாம்..!!;

Update: 2022-05-25 04:45 GMT

இந்தோனேசியா நாட்டில் பழங்குடியின மக்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். அவர்களில், இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு இடைப்பட்ட எல்லை அருகே வடகிழக்கு பகுதியான போர்னியோ என்ற இடத்தில் திடாங் பழங்குடியின சமூகத்தினர் வசிக்கின்றனர்.

இந்த பழங்குடி மக்கள் தான் திருமணம் முடிந்த பிறகு புதுமணத்தம்பதி 3 நாட்கள் கழிவறையை பயன்படுத்த கூடாது என்பதை சடங்காக பின்பற்றி வருகின்றனர்.

இந்த விதியை மீறினால் அந்த தம்பதிக்கு பயங்கர விளைவுகள் ஏற்படும். திருமண முறிவு, துணைக்கு துரோகம் செய்தல், இளம் வயதில் தம்பதியின் குழந்தைகள் உயிரிழப்பது போன்ற சோகங்கள் ஏற்படும் என்பது பழங்குடியினரின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் புதுமணத் தம்பதி கழிவறையை பயன்படுத்தாமல் தடுப்பதை கண்காணிக்கும் வகையில் குடும்ப உறுப்பினர் சிலர் காவலாளியாகவும் பணியாற்றுவது கூடுதல் வியப்பை ஏற்படுத்துகிறது. அதோடு இந்த 3 நாட்களும் புதுமணத்தம்பதிக்கு அதிகளவில் உணவுகள் வழங்கப்படுவது இல்லை. குறைவாகவும், குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே வழங்குகின்றனர்.

எப்போதெல்லாம் அந்த பழங்குடியின மக்களிடையே திருமண நிகழ்ச்சி நடைபெறுமோ, அப்போது இந்த வினோத நடைமுறையை தம்பதி கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

அனைத்து திருமண சடங்கு உள்ளிட்ட நடைமுறைகளும் முடிந்த பின்னர், அந்த தம்பதியை அறை ஒன்றுக்கு அழைத்து செல்வார்கள். அந்த அறையிலேயே தம்பதியின் முதல் 3 நாள் கழியும். ஆனால், அவர்களால் ஆத்திர, அவசரத்திற்கு கழிவறை செல்ல முடியாது.

இந்த சவாலை சந்தித்து அதில் வெற்றி பெறும் தம்பதியின் திருமண வாழ்வே நீடித்திருக்க முடியும் என்றும் அதனை செய்ய தவறுபவர்களுக்கு திருமண வாழ்வில் துரதிர்ஷ்டம் வந்து சேரும் என்றும் நம்பப்படுகிறது. இதனை இளம் தம்பதி எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தபோதிலும், இன்றைய காலகட்டத்திலும் இந்த வினோத சடங்கை அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News