அதிகாலையில் நடுங்கிய தெரு மக்கள்.. மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த கணவன் !!

அதிகாலையில் நடுங்கிய தெரு மக்கள்.. மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த கணவன் !!

Update: 2022-04-16 06:50 GMT

முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கணவனே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதிதியில் சச்சின் காலே, இவரது மனைவி அஸ்வினி (25) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் மனைவி அஸ்வினி கடந்த சில மாதங்களாக தினமும் அதிகநேரம் செல்போனில் பேசியப்படி இருந்துள்ளார். ஆனால் குடும்பத்தினர் இதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஆனால், அஸ்வினி திருமணத்துக்கு முன்பு காதலித்த இளைஞருடன் மீண்டும் பேசியதும், அந்த பழக்கம் வளர்ந்து நாளடைவில் காதலனுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டார். அதன்பின்னர் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.

அஸ்வினியின் கள்ளக்காதல் விவகாரம் கணவரின் வீட்டினருக்கு தெரியவந்தது. அஸ்வினியை அவரது கணவர் உள்ளிட்டவர்கள் கண்டித்து உள்ளனர். ஆனால் அஸ்வினி தனது கணவர் சச்சன் காலேவை விட்டு பிரிந்து காதலருடன் சென்று அவரது வீட்டில் தங்கி உள்ளார். இது பற்றி சச்சின் காலே தனது மனைவியை மீட்டு தருமாறு போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் அஸ்வினியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து கவுன்சிலிங் கொடுத்து கணவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த தம்பதியினர் சம்பவத்தன்று இரவு ஒன்றாக படுத்து இருந்தனர். அப்போது பழைய பிரச்சினை தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சச்சின் காலே மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் தூங்கி கொண்டு இருந்த மனைவி அஸ்வினியின் முகத்தில் தலையணையை அமுக்கி பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சச்சின் காலேவை கைது செய்தனர்.

newstm.in

Tags:    

Similar News