நாளை வேலை நிறுத்தம்.. திடீர் அறிவிப்பு..!

நாளை வேலை நிறுத்தம்.. திடீர் அறிவிப்பு..!

Update: 2022-07-15 15:33 GMT

அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பதை எதிர்த்து 4,000-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி விற்பனை கடைகளை அடைத்து நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள், வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் - அரிசி வணிகர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் துளசிங்கம், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“வணிகப் பெயரில் அல்லாமல் பையில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, வரும் 18-ம் தேதி அமலுக்கு வர உள்ளது. அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி அமல் படுத்தினால் ஒரு கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை அதிகரிக்கும்.

எனவே, அரிசிக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வரும் 16-ம் தேதி (நாளை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

அன்றைய தினம் தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மொத்த விற்பனை கடைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் அடைக்கப்படும்.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், உத்தர பிரேதசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரிசி வணிகர்கள் அன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்” என்று கூறினார்.

Similar News