கடும் எதிர்ப்பு.. இந்திய கால்பந்து அணிக்கு ரூ.16 லட்சம் சம்பளத்துக்கு ஜோதிடர் நியமனம்?

கடும் எதிர்ப்பு.. இந்திய கால்பந்து அணிக்கு ரூ.16 லட்சம் சம்பளத்துக்கு ஜோதிடர் நியமனம்?;

Update: 2022-06-22 19:43 GMT

இந்திய ஆடவர் கால்பந்து அணிக்கு ஊக்கம் கொடுக்க ஜோதிடருக்கு 16 லட்ச ரூபாய் கொடுத்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு பணி அமர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுனில் சேத்ரி தலைமையிலான அணி அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உள்ள ஆசிய கோப்பையில் பங்கேற்கிறது.

இந்திய ஆண்கள் கால்பந்து அணி அண்மைக்காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நடைபெற்ற முடிந்த தொடரில் பெற்ற வெற்றியின்மூலம் ஆசிய கால்பந்து கோப்பைக்கான தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில், இந்த வெற்றிக்கு பின்னால் ஜோதிட சாஸ்திரம் இருப்பதாக பகீர் தகவல் வெளிவந்துள்ளது.அதாவது, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அணியின் நட்சத்திர லைன்-அப்பை சீரமைக்க ஜோதிடத்தின் துணையை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து இந்திய கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், நான் இதை வெளிப்படையாக சொல்கிறேன். அணிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ரூ.16 லட்சம் செலவில் ஜோதிடர் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆசிய கோப்பையை முன்னிட்டு அணிக்கு உத்வேகம் கொடுக்கும் மோட்டிவேட்டர் ஒருவர் நியமிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் தான் அது ஒரு ஜோதிட நிறுவனம் என்பது எனக்கு தெரியவந்தது, என்றார்.

இந்த விவகாரம் பெரிய அளவில் கேலிக்கும் சர்ச்சைக்கும் ஆளாகியுள்ளது. மேலும் முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
newstm.in
 

Tags:    

Similar News