தோழியின் தாயார் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்.. மாணவன் கைது..!
தோழியின் தாயார் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்.. மாணவன் கைது..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர், அங்குள்ள தனியார் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.
சமீபத்தில் இவர், தனியார் மருத்துவமனையில் ரத்ததானம் செய்ய சென்றபோது அங்கு பணியாற்றிய நர்ஸ் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், அவ்வப்போது அந்த நர்ஸ் வீட்டுக்கு சென்று வந்துள்ள பார்த்திபன், நர்சின் 49 வயது தாயாரிடமும் பாசமாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த நர்ஸுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் பார்த்திபனின் நட்பை நர்ஸ் முறித்துக் கொண்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், அவருடைய தாயார் குளிக்கும் போது தான் வீடியோக்கள் எடுத்து வைத்திருப்பதாகவும், ரூ.50 ஆயிரம் தரவில்லை என்றால் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நர்ஸ், தனது தாயாருடன் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் பார்த்திபனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பார்த்திபனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் பல ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.