மாணவர்கள் வருகைப் பதிவு குறைவு.. பள்ளிகள் விளக்கம் அளிக்க உத்தரவு..!
மாணவர்கள் வருகைப் பதிவு குறைவு.. பள்ளிகள் விளக்கம் அளிக்க உத்தரவு..!
கடந்த சில மாதங்களாக, எமிஸ் இணையதளத்தின் கீழ் மாணவர்களின் வருகைப்பதிவு ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குள் மாணவர்களின் வருகையை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். ஆனால், சர்வர் சிக்கலால் தற்போது மாலை, இரவு வரை பதிவு பணிகளை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது.
சமீபத்தில், கோவையில் பள்ளிகளின் வருகை பதிவு ஆய்வு செய்யப்பட்ட போது, பல பள்ளிகளில் வருகைப் பதிவு 75 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் பதிவின்போது 'நெட்' தொடர்பு வசதி இல்லாமல் வருகையை பதிவு செய்ய திணறி வருகின்றனர். இதன் காரணமாகவே பல பள்ளிகளில் வருகைப் பதிவு 75 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி அருளானந்தம் கூறுகையில், ”ஆன்லைன் வருகைப் பதிவை ஆசிரியர்கள் அவரவர் மொபைல் போன் மூலம் மேற்கொள்கின்றனர்.
சிக்னல் கோளாறு காரணமாக பதிவு செய்த பின் 'கிரீன் சிக்னல்' வர நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. அரசு, அனைத்து பள்ளிகளிலும் இணைய வேகம் அதிகமாக கிடைக்கும் வகையில் 'வை-பை' வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் எமிஸ் பதிவு மற்றும் ஆன்லைன் வருகைப் பதிவில் சிக்கல் இருக்காது” என்றார்.