கழுத்தறுக்கப்பட்டு கிடந்த மாணவி.. கொலையா, தற்கொலையா..?: போலீஸ் விசாரணை..!

கழுத்தறுக்கப்பட்டு கிடந்த மாணவி.. கொலையா, தற்கொலையா..?: போலீஸ் விசாரணை..!

Update: 2022-03-30 11:20 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலை சிங்கப்பூர் நகர் முதல் தெருவில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி வீட்டில் கழுத்து அறுபட்டு உயிரிழந்து கிடந்தார்.

நேற்று மாலை வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய அவரது தாய் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மாணவியை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் எஸ்பி சசாங்ஷாய், உடுமலை டிஎஸ்பி தேன்மொழி வேல் தலைமையிலான போலீசார் மாணவி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News