தனியார் கல்லூரியின் கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை..!! தற்கொலைக்கான கடிதம் சிக்கியது...

தனியார் கல்லூரியின் கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை..!! தற்கொலைக்கான கடிதம் சிக்கியது...

Update: 2022-05-18 04:45 GMT

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள் தனலட்சுமி (19). இவர் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள கே.எம்.சி பெண்கள் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவி, கல்லூரியின் பின்புறத்தில் உள்ள கழிவறைக்கு சென்று, துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த விரைந்து வந்த கடலூர் புதுநகர் போலீசார் மாணவியின் உடலை பார்வையிட்டனர். அதன்பின் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பேக்கை சோதனையிட்ட போது கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், ‘எனக்கு நா ஃபெயில் ஆயிடுவோனோனு பயமா இருக்கு அதா போய்டலாம்னு முடிவு பண்ணிடேன்’ என்று எழுதியிருந்தார்.

அதனை தொடர்ந்து போலீசார், மாணவி தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News