உக்ரைனில் குண்டுவீச்சில் மாணவர் உயிரிழப்பு.. பெற்றோருக்கு முதலமைச்சர் ஆறுதல் !!

உக்ரைனில் குண்டுவீச்சில் மாணவர் உயிரிழப்பு.. பெற்றோருக்கு முதலமைச்சர் ஆறுதல் !!

Update: 2022-03-01 18:15 GMT

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆறாவது நாளான இன்று சண்டைகள் தொடர்கின்றன. நேற்று ஏவுகணைத் தாக்குதல்களால், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் டஜன் கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். அதே நேரத்தில் தலைநகரான கீவ்-வில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் மீண்டும் ஒலித்தன.

கார்கிவ் நகரில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள், இன்று ரஷ்ய படையினரின் ஏவுகணை மற்றும் ஷெல் குண்டு தாக்குதல்களால் இலக்கு வைக்கப்பட்டன. இதில் கர்நாடகாவைச் சேர்ந்தவருமான நவீன் சேகரய்யா பலியாகியுள்ளார். இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

தான் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து உணவுக்குத் தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்றபோது குண்டுவெடிப்பு தாக்குதலில் நவீன் சிக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அந்த நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கார்கிவ் நகரில் கர்நாடக மாணவர் நவீன் மரணம் அடைந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினரை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். உக்ரைனின் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரய்யாவின் தந்தை சேகர் கெளடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். நவீனைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற்ற பொம்மை, துயரமான இந்த நேரத்தில் குடும்பத்துடன் தாம் இருப்பதாகக் கூறினார்.

இது ஒரு பெரிய அடி. எல்லாம் வல்ல இறைவன் நவீனுக்கு நித்திய சாந்தியை வழங்கட்டும். நடக்கும் துயரத்தைத் தாங்க நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும் என அப்போது பசவராஜ் பொம்மை கூறினார். மேலும், உயிரிழந்த நவீனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக காலையில்தான் தமது மகனுடன் செல்பேசியில் பேசியதாக சேகரய்யா கூறினார். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பெற்றோரை தொடர்பு கொள்வதை நவீன் வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் சேகரய்யா கூறினார். அதேபோல் நவீன் பெற்றோருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News