ஸ்நாக்ஸ் சாப்பிட்ட மாணவி… ஆசிரியர் திட்டியதால் விபரீத முடிவு!!
ஸ்நாக்ஸ் சாப்பிட்ட மாணவி… ஆசிரியர் திட்டியதால் விபரீத முடிவு!!
ஆசிரியர் திட்டியதால் மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ரம்யா மூர்த்தி என்ற மாணவி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அவர் வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டுள்ளார். அதைப்பார்த்த ஆசிரியர் அவரை கண்டித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கூட்டிச் சென்றுள்ளார்.
அப்போது அவரும் பெற்றோரை வரவழைத்து மாணவியைத் திட்டியுள்ளார். இதனால் பள்ளியின் தலைமையாசிரியர் மீது மாணவியின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இதனால் மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மனவுளைச்சலடைந்த மாணவி ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தொல்லை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதியிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in