சென்னை மெரினா கடற்கரையில் முதல்வருடன் மாணவர்கள் செல்பி..!!
சென்னை மெரினா கடற்கரையில் முதல்வருடன் மாணவர்கள் செல்பி..!!
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக வலம் வந்தன. இதன் முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் வரும் 23-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு அலங்கார ஊர்திகள் வைக்கப்பட்டுள்ளன.
கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் இந்த அலங்கார ஊர்திகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் அலங்கார ஊர்திகளை பார்வையிட்டனர். அப்போது சென்னை கோட்டைக்கு சென்ற போது அந்த வழியாக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காரில் இருந்து இறங்கி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அலங்கார ஊர்திகளின் பின்னணியில் மாணவ, மாணவிகளுடன் முதல்வர் செல்பி எடுத்துக் கொண்டார். இதை அங்கிருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவ - மாணவிகளுடன் உரையாடியது, அவர்களுடன் செல்பி எடுத்தது அவரது எளிமை அங்கிருந்த பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.