மாணவர்களே உஷார்..!! பறிமுதல் செய்யப்படும் செல்போன் திருப்பித் தரப்படாது..!!

மாணவர்களே உஷார்..!! பறிமுதல் செய்யப்படும் செல்போன் திருப்பித் தரப்படாது..!!

Update: 2022-06-15 04:55 GMT

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் போது பள்ளிகள் மூடப்படுவதும், பாதிப்பு குறையும் போது பள்ளிகள் திறக்கப்படுவதும் என்ற நிலையே நீடித்து வந்தது.

இதனால், பள்ளிப் பாடத்திட்டங்கள் வெகுவாக குறைக்கப்பட்டன. அதன்படி 10-ம் வகுப்புக்கு 39 சதவிதம், 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவிதம், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 50 சதவிதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12-ம் வகுப்புக்கு 20-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு 27-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு வழக்கமான கல்வியாண்டாக இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழு பாடங்களாக நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ், “கடந்த இரண்டு வருடங்களாகவே கரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் மன இறுக்கத்தில் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளியிடும் வீடியோக்கள் சர்ச்சைக்குள்ளாகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்போன்களை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறையில் பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் மாணவர்களிடம் திருப்பித் தரப்பட மாட்டாது” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News