ஹிஜாப் அணிந்த மாணவிகள், ஆசிரியர்களுக்கு பள்ளிக்குள் அனுமதி மறுப்பு.. பரபரப்பு வீடியோ !!
ஹிஜாப் அணிந்த மாணவிகள், ஆசிரியர்களுக்கு பள்ளிக்குள் அனுமதி மறுப்பு.. பரபரப்பு வீடியோ !!
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து அம்மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை கண்டித்து இஸ்லாமிய மாணவிகள் அதே இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
பதிலுக்கு இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 9ஆம் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவி துண்டு அணிந்திருந்த மாணவர்கள் கல்லூரியின் தேசியக்கொடி கம்பத்தில் காவிக்கொடியை பறக்கவிட்டனர்.
இதையடுத்து கர்நாடகத்தில் உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து கர்நாடக அரசு கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டது. அதேநேரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
மேலும் பள்ளி, கல்லூரிகளை உடனே திறக்க வேண்டும் என்றும், இறுதி தீர்ப்பு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர். நீதிதமன்ற உத்தரவை தொடர்ந்து 4 நாட்களுக்கு பின்னர் கர்நாடகத்தில் இன்று உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டன. 8 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலம் பாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மாணவிகளை பள்ளிகளில் விடுவதற்காக பெற்றோர்களும் வந்திருந்தனர். பள்ளிக்குள் சென்றதும் ஹிஜாப்பை அகற்றுவதாக பெற்றோர்கள் கூறினார்கள்.
ஆனால் அதை ஏற்க ஆசிரியர்கள் மறுத்து விட்டனர். ஹிஜாப் அணியாமல் வந்தால் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகாவில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் இஸ்லாமிய ஆசிரியர்களும் ஹிஜாப் அணிந்து பள்ளிக்குள் செல்ல தடை விதித்தனர். அவர்களையும் சாலையில் நிற்கவைத்து ஹிஜாப் அகற்றியப்பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
#Mandya dist administration has instructed even the teachers to be not allowed inside campus with #hijab. They should remove the hijab at the gate itself before entering school or college. #KarnatakaHijabRow #HijabControversy #Karnataka pic.twitter.com/bt33RTTmgp
— Imran Khan (@KeypadGuerilla) February 14, 2022
newstm.in