மாணவர்களே, பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. லிங்க் இங்கே இருக்கு..!

மாணவர்களே, பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. லிங்க் இங்கே இருக்கு..!

Update: 2022-06-24 11:23 GMT

பாலிடெக்னிக் முடித்தவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளில் நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்’ என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பிஎஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2022 - 2023-ம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை: www.accet.co.in / www.accetedu.in / www.tnlea.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் நாள்: 24-06-2022 முதல் 23-07-2022 வரை.

பதிவுக் கட்டணம்: 300 ரூபாய். SC/SCA/ST பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை. மற்றவர்கள் Debit Card / Credit Card / Net Banking மூலம் பதிவுக் கட்டணம் செலுத்தலாம்.

இணையதளம் மூலம் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள், ‘The Secretary, Second year B.E./B.Tech.Degree Admissions 2022-2023, ACGCET,Karaikudi, payable at Karaikudi’ என்ற பெயரில், 24.06.2022 முதல் பெற்ற வரைவோலையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFC) மூலம் சமர்ப்பிக்கலாம்.

இந்த கல்வியாண்டில் Second Year B.E./B.Tech. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளம் மூலம் மட்டுமே நடைபெறும்.

மேலும் விவரங்களை www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in ஆகிய இணையதள முகவரியில், ‘INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES’ என்ற பக்கத்தில் பார்க்கவும்.

கூடுதல் விவரங்களுக்கு 04565-230801, 04565-224528 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News