மாணவர்களே தயாரா.. இறுதி தேர்வு மே முதல் வாரத்தில் தொடங்குகிறது !!

மாணவர்களே தயாரா.. இறுதி தேர்வு மே முதல் வாரத்தில் தொடங்குகிறது !!

Update: 2022-04-16 09:49 GMT

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே முதல் வாரத்தில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கொரோனா கட்டுப்பாடுகளால் பள்ளிகள் திறப்பு தமிழகத்திலும் தாமதமானது. இதன்காரணமாக இடையில் விடுமுறை விடப்பட்டதாலும், குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படி மாணவர்களுக்கும் பாடங்கள்நடத்தப்பட்டன. அதேநேரத்தில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறி வந்தது.

இந்த நிலையில், பொது தேர்வு மாணவர்களுக்கு இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. வரும் 25ஆம் தேதி செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5 முதல் படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கும் பொது தேர்வு துவங்க உள்ளது.

இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே முதல் வாரத்தில் இருந்து, ஆண்டு இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவிலும்; ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட அளவிலும், ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


newstm.in

    

Similar News