நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்கள்..!!

நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்கள்..!!

Update: 2022-05-17 11:44 GMT

 ரூட் தல விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்கள் தாக்கி கொள்வதுடன், பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை சிக்னல் அருகே பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் திருத்தணி ரூட் மாணவர்கள் மற்றும் பூந்தமல்லி ரூட் மாணவர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கத்தி, பாட்டில், கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரை கண்டு மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில், காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சந்தேகத்திற்கிடமாக சுற்றிய மாணவர்கள் 6 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கீழ்ப்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே மாணவர்கள் வைத்திருந்த பையில் இருந்து 8 பட்டாக்கத்திகள் மற்றும் காலி பாட்டில்களை காவல் துறையினர் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News