மாணவர்கள் இனி ஈஸியா இங்கிலீஸ் பேசலாம்.. கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்..!

மாணவர்கள் இனி ஈஸியா இங்கிலீஸ் பேசலாம்.. கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்..!

Update: 2022-05-05 17:48 GMT

பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளிக் கல்வித்துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் முத்தமிழ் பொழிபெயர்பு, இளந்தளிர் இலக்கியம், திசைதோறும் திராவிடம் திட்டத்தில் நூல்களையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதாக கற்க, பேச கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, Google Read Along செயலியை அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக Google India & School Education இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தலைமைச் செயலாளர் உடன் இருந்தனர்.

Similar News