மாணவர்களே, தேர்வு தேதி மாற்றம்.. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
மாணவர்களே, தேர்வு தேதி மாற்றம்.. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
சென்னை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகையான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து வகையான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளின் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 2-ம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் தொடங்கும். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.