மாணவர்களே, உடனே போங்க.. இன்றே இதற்கு கடைசி நாள்..!
மாணவர்களே, உடனே போங்க.. இன்றே இதற்கு கடைசி நாள்..!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
28-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியே 30-ம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து, மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருந்தது.
அதன்படி, மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டு, மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.
மேலும், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று (21-ம் தேதி) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.