பேருந்து படியில் தொங்கி மாணவிகள் பயணம்!!
பேருந்து படியில் தொங்கி மாணவிகள் பயணம்!!
ஆபத்தை உணராமல் அரசு கல்லூரி மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வது பார்ப்போரை அச்சம் கொள்ள வைக்கிறது.
நெல்லை காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4,300 மாணவிகள் பயின்று வருகின்றனர். மாநகர எல்லைக்குள் பாளையங்கோட்டை மற்றும் டவுன் பகுதிகளில் அதிகமான பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
மாநகர பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக தனிப்பட்ட முறையில் பேருந்துகள் இயக்கம் எதுவும் இல்லை. மாநகரில் உள்ள இரண்டு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, இயக்கப்படும் மொத்தப் பேருந்துகள் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே உள்ளது.
இதன் காரணமாகவே பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வீடு திரும்ப வேண்டிய சூழல் உள்ளதாக மாணவ-மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, போக்குவரத்து துறையில், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் மாநகருக்குள் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இருந்தும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
newstm.in