நீட் மாணவர்களே, நாளை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியானது..!
நீட் மாணவர்களே, நாளை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியானது..!
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு என்95 முகக்கவசம் வழங்கப்படும்.
மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவர்.
தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உடலின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதில் வெப்பநிலை அதிகமாக இருந்தால், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு முடிந்ததும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மதியம் 1.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை.
விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப்சைட் www.nta.ac.in-ல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.