மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சிவசங்கர் பாபாவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சிவசங்கர் பாபாவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்..!

Update: 2022-04-08 16:09 GMT

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், கடந்த அக்டோபரில், அளித்த புகாரில் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சிவசங்கர் பாபா சார்பில் வக்கீல் ஸ்வாதி ஜிந்தல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி விசாரித்தது. மேல்முறையீட்டு மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், சாட்சிகளை அச்சுறுத்தி ஆதாரங்களை கலைத்துவிடுவார்.

எனவே, சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கலைக்க முயற்சித்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும்.

குற்றம் தொடர்புடைய பள்ளி வளாகத்துக்குள் சிவசங்கர் பாபா நுழையக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Similar News