மாணவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.. சென்னைப் பல்கலை. சூப்பர் அறிவிப்பு !!

மாணவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.. சென்னைப் பல்கலை. சூப்பர் அறிவிப்பு !!

Update: 2022-06-03 06:45 GMT

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தில் சேர பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏழை மாணவா்கள் இளநிலைப் படிப்புகளில் பயன்பெறும் வகையில் இலவசக் கல்வித் திட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள், ஆதரவற்ற மாணவா்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறையைச் சோ்ந்த மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.

பிளஸ் 2 வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாள்களுக்குள் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது உரிய ஆவணங்களைத் தவறாமல் சமா்ப்பிக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News