மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்..!

மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்..!

Update: 2022-06-20 13:55 GMT

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7,55,998 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 93.76 சதவீதம் தேர்ச்சி ஆகும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவ - மாணவியர் எழுதிய நிலையில், அதில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; இது, 90.7 சதவீதம் தேர்ச்சி ஆகும். இதில், மாணவிகள் 4.27 லட்சம் பேர் (94.38%) , மாணவர்கள் 3.94 லட்சம் பேர் (85.83%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Similar News