3 மடங்கு தேர்வு கட்டணத்தை உயர்த்தியதால் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!!

3 மடங்கு தேர்வு கட்டணத்தை உயர்த்தியதால் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!!

Update: 2022-04-07 13:10 GMT

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக உள்ளது. அந்த கல்லூரிகளில் அதிக அளவில் ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை 3 மடங்காக உயர்த்தியுள்ளது. தேர்வு கட்டணம் மட்டுமின்றி மற்ற அனைத்து கட்டணத்திலும் உயர்த்துவதை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு, கல்லூரி வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய மாணவர்கள், ஒரே வேளையில் 3 மடங்கு தேர்வு கட்டணத்தை உயர்த்தினால் நாங்கள் எவ்வாறு தேர்வுக்கட்டணம் செலுத்துவது, தேர்வு எழுதுவது. மேலும் கல்விக்கட்டணம் உயர்த்தப்படுவதால், பல ஏழை மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும். எனவே பாரதிதாசன் பல்கலை. தங்களுக்கு தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இல்லையென்றால் வரும் 13-ம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வாயில் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Similar News