படித்தது 10-ம் வகுப்பு.. நடத்தியது மருத்துவமனை.. 15 வருடங்களுக்கு பின் போலி டாக்டர் கைது..!

படித்தது 10-ம் வகுப்பு.. நடத்தியது மருத்துவமனை.. 15 வருடங்களுக்கு பின் போலி டாக்டர் கைது..!

Update: 2022-07-17 05:50 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தலைமை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் மாறன். இவர், ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சுபல்குமார் மாண்டல் (41) என்பவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து டாக்டர் மாறன் ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போலி டாக்டர் சுபல்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபல்குமார் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஊத்துக்கோட்டையில் 15 வருடங்களாக மருத்துவமனை நடத்தி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News