இ-சைக்கிள் வாங்க மானியம்.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!

இ-சைக்கிள் வாங்க மானியம்.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!

Update: 2022-04-08 13:50 GMT

டெல்லியில், இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு தலா 5,500 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட் கூறியதாவது; “டெல்லியில் இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு தலா 5,500 ரூபாய் மானியம் வழங்கப்படும்; அதில், முதல் 1000 பேருக்கு 2000 ரூபாய் கூடுதல் மானியம் வழங்கப்படும்.


வர்த்தக பயன்பாட்டுக்கான கனரக சரக்கு இ-சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். கார்கோ இ-சைக்கிள்களுக்கான மானியம் முதல் 5,000 பேருக்கு தலா 15,000 ரூபாய் வழங்கப்படும். டெல்லியில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த மானியத் திட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள்.

டெல்லி நகர சாலைகளில் தற்போது 45,900 இ-வாகனங்கள் இயங்கி வருகிறது. இதில், 36 சதவீதம் இருசக்கர வாகனங்கள். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் இ-வாகனங்களின் சதவீதம் 12 சதவீதமாக தாண்டியுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

Similar News