வெற்றி காத்திருக்கிறது.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

வெற்றி காத்திருக்கிறது.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

Update: 2022-06-20 15:57 GMT

10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  இன்று வெளியிட்டார்.

அதன்படி, 12-ம் வகுப்பு தேர்வில் 93.76 சதவீதம் மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வில் 90.07 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ - மாணவியர் மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி, உங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்.

தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்த முயற்சியில் தேர்ச்சி பெறுங்கள். உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது” என்று அதில் தெரிவித்துள்ளார்.

Similar News