வெளியான திடீர் அறிவிப்பு.. டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல் !!
வெளியான திடீர் அறிவிப்பு.. டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல் !!
சேலம் மாவட்டத்தில் வருகிற 14 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை விவகாரம் எப்போதும் சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் மதுவிற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் வருகிற 14 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 14 ஆம் தேதியன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற ஓட்டல், கிளப்புகளில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது..
மேலும், அன்று மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. இதனை மீறி நடப்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் குடிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும் இரண்டு நாட்கள் இருப்பதால் இப்போதே மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் வைக்க தயாராகி வருகின்றனர்.
அதேநேரத்தில் வரும் 14 ஆம் தேதி கள்ளச்சந்தையில் மதுவிற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
newstm.in