திடீர் அறிவிப்பு.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!
திடீர் அறிவிப்பு.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் உள்ளிட்ட சில இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் தடை விதிப்பதாக வனத்துறை அறிவிப்பு வெளியீட்டுள்ளது.
தற்போது கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். எனினும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது இது மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் வரும் நாட்களில் மழை குறையும் என்பதால் அருவியில் நீர்வரத்து சரியத் தொடங்கும் அப்போது சில பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறை தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
Newstm.in