குற்றால அருவிகளில் குளிக்க திடீர் தடை! ஏன் தெரியுமா?
குற்றால அருவிகளில் குளிக்க திடீர் தடை! ஏன் தெரியுமா?
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மே மாத இறுதியில் சீசன் துவங்கியது. ஆனால் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழையும் கன மழையும் பெய்து வருவதால் அவ்வப்போது அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்து வரும் சாரல் மழையால் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, பிரதான அருவி ஆகியவற்றில் அதிகப்படியான தண்ணீர் வரத்து இருக்கிறது.
இதையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. சாரல் மழையோடு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் தண்ணீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக சிறு கற்கள் மணல் என அருவிகளில் விழத்துவங்கியது.
இதனால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் தண்ணீர் குறைந்து, கற்கள், மண் விழாமல் இருந்தால் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in