திடீர் பரபரப்பு.. சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த புல்லட் !!
திடீர் பரபரப்பு.. சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த புல்லட் !!
மயிலாடுதுறையில் சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி வெப்பம் தகித்து வருகிறது. எனினும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து குளிர்வித்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்து வருகிறது.
மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் தனது வகுப்பை முடித்துக்கொண்டு புல்லட் பைக்கில் சென்றிருக்கிறார். அவர் சிறிது தூரம் சென்றபோது பைக் இன்ஜின் பகுதியில் உள்ள வயரில் மின் கசிவு ஏற்பட்டு சிறிய அளவில் தீப்பற்ற தொடங்கியிருக்கிறது.
இதனை கவனித்த மாணவர் உடனடியாக சாலையோரமாக பைக்கை நிறுத்திவிட்டு, இன்ஜினில் உள்ள வயரை பிடுங்கியுள்ளார். அப்போது தீ வேகமாக பரவி எரியத் தொடங்கியது. எனினும் பதறாமல் அருகில் இருந்த கடையில் இருந்து தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்ட போதும் தீ அணையவில்லை.
இறுதியில் சாலையோரம் இருந்த மண் மூட்டைகளில் இருந்த மண்ணை பைக் மீது கொட்டி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படாவிட்டாலும் பைக் சேதம் அடைந்தது. அதிக வெப்பமும், பெட்ரோல் டேங்க்கை முழுமையாக நிரப்பியதும்தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
newstm.in