திடீர் பரபரப்பு... ஆளுநரை தொடர்ந்து முதலமைச்சருக்கும் கொரோனா உறுதி !!

திடீர் பரபரப்பு... ஆளுநரை தொடர்ந்து முதலமைச்சருக்கும் கொரோனா உறுதி !!

Update: 2022-06-22 17:22 GMT

ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில் முதலமைச்சருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. அமைச்சர் ஏக்நாத் ஷின்டே தலைமையில் 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர். இதனால் மகாராஷ்டிர சட்டப்பேரவை கலைக்கப்படலாம் என தகவல்களும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதற்கு சற்று முன்னதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்புக்குள்ளானதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்நாத் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச முடியவில்லை. அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன், என்றார். 

அதேபோல்,  மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா சோதனைக்குப் பிறகு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு அவர் தனது ட்விட்டர்  பதவில் கூறியுள்ளார்.  

newstm.in

Tags:    

Similar News