திடீர் பரபரப்பு.. தேர்தலில் மனைவி தோல்வியடைந்ததால் விஷம் குடித்து கணவர் !!
திடீர் பரபரப்பு.. தேர்தலில் மனைவி தோல்வியடைந்ததால் விஷம் குடித்து கணவர் !!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தனது மனைவி தோல்வியடைந்ததால் மனமுடைந்த அவரது கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் துப்பரவுப் பணி மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருபவர் நாகராஜன் (58) என்பவரது மனைவி சுகுணாதேவி. சுகுணாதேவி, நகர்ப்புற ஊராட்சி தேர்தலில் சாத்தூர் நகராட்சி 19ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியப்போதே அவர் தனது ஆதரவாளர்களுடன் அங்கு பரபரப்பாக இருந்தார்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் சுகுணாதேவி 215 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுபிதா 595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சாத்தூர் நகராட்சியில் மொத்த 24 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 18 வார்டுகளில் வெற்றி பெற்று சாத்தூர் நகராட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், தனது மனைவி தோல்வியடைந்ததில் மனமுடைந்த நாகராஜன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிசைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நாகராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மாதம் இறுதியில் நகராஜன் பணி ஓய்வுபெறும் நிலையில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் சாத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in